மோசடி… இருவர் அதிரடி கைது

Prakash
0 0
Read Time2 Minute, 12 Second

குமரி: குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி(62) . இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

அப்போது அவர் கடைக்கு வந்த மணிகண்டன் (43) , மற்றும் ஜான் (38)  ஆகியோர் ஜெபமணியிடம் பழக்கம் ஏற்படுத்தி தங்களிடம் ஹவாலா பணம் இருப்பதாகவும் ஒன்றுக்கு இரு மடங்காக தருவதாக ஆசைவார்த்தை  ஜெபமணி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து 18 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர் .

 பணத்தை கொண்டு வரும்போது  போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது என ரூபாயை வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளனர்  பின்பு  40 லட்சம் பணம் தாருங்கள் மொத்தம் 1 கோடியாக திருப்பி தருகிறோம் என மணிகண்டன்மற்றும் ஜாண் மீண்டும் ஜெபமணியிடம்  கூறியுள்ளனர் . சந்தேமடைந்த ஜெபமணி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன்  குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார் . அவரது உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவசங்கர் மற்றும் காவலர்கள் , மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார்  ஆகியோர்  குற்றவாளிகளை பிடிக்க  நடவடிக்கை மேற்கொண்டனர். ஜெபமணியிடம் பணத்தை தருகிறோம் என கூறி  குற்றவாளிகளை இருவரையும் வரவழைத்து சிராயன்குழி பகுதியில் வைத்து மணிகண்டன் மற்றும் ஜானை  பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் . விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி  வெகுவாக பாராட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல வறட்டு இருமலை போக்க இதை படிங்க !

355 தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல வறட்டு இருமல் 95% கிருமித் தொற்றின் அறிகுறி ஆகும். சாதாரண இருமலை போல் அல்லாமல் வறட்டு இருமலின் போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami