காவல்துறைக்கு ரூ.193 கோடி திட்டங்கள் சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட 71 புதிய அறிவிப்புகள்

Admin
0 0
Read Time4 Minute, 26 Second

காவல்துறை மானியக்கோரிக்கையின் போது கீழ்கண்ட அறிவிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள்.
1. காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, அவர்களது பதவி மற்றும் பணிப்பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் வழங்கப்பட்ட  இடர்படி இருமடங்காக உயர்த்தபடும்….!!
2) காவல் பணியாளர்களுக்கு வழங்கப்படும்  சீருடை மற்றும் உபகரண பராமரிப்புப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தி வழங்கப்படும்.
3) நக்சலைட் தடுப்பு சிறப்புப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு,   சிறப்பு இலக்குப் படையினருக்கு இணையாக படிகள் வழங்கப்படும்.
4) கடலூர், தேனி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், தர்மபுரி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் 3 காவல் ஆய்வாளர் குடியிருப்பு, 15* காவல் சார்பு ஆய்வாளர் குடியிருப்பு, *253 காவலர் குடியிருப்புகள் 46 கோடியே  35 லட்சத்தில் கட்டப்படும்.
5)  காவலர்கள் விரைந்து சென்று குற்றங்களைத் தடுக்க ஏதுவாக 3 பெரிய ஜீப்புகள், 3 சிற்றுந்துகள், 3 வேன்கள், 3 பெரிய ஜீப்புகள் மற்றும் இரண்டு அவசரகால ஊர்திகள் 1 கோடியே 32 லட்சத்தில் வாங்கப்படும்..
6) காவல் துறைக்கு   60 லட்சம் ரூபாய் செலவில் 100 குண்டு துளைக்காத பொதியுறைகள் ( Bullet Proof Jocket )   வாங்கப்படும்.
7) சந்தேகத்திற்கு இடமான பொருளை பிரித்து  பார்க்க இயலாத நிலையில் உட்புற தன்மையை கண்டறிய ஏதுவாக 60லட்சம் ரூபாய் செலவில், வாகனத்தில் பொருத்தக் கூடிய ( Vehicle Mounted Baggage Scanner )     கருவி ஒன்று வாங்கப்படும்.
8 ) மேலும் இச்சமயத்தில் பயன் பெற நவீன ஊடுகதிர் இயந்திரம் ( X-ray Baggage Scanner  )  60லட்சம் செலவில்  மூன்று வாங்கப்படும்.
9) வெடிகுண்டுகளை கண்டறிய காவல்துறைக்கு   ( Explosive Vapour Detectors )  51லட்சம் செலவில் மூன்று கருவிகள் வாங்கப்படும்.
10)  மின் அலைகள் மூலம் இயக்கக் கூடிய வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் சிறிய ஜாமர் ( Mini   Jammer )   சாதனம் ஒன்று சூ30லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.
11)  காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் போது தரையில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் மின்னணு சாதனங்களைக் கண்டுபிடிக்க ஏதுவாக ( Non Linear Juction Detector )   கருவி 24லட்சம் ரூபாய் செலவில் மூன்று வாங்கப்படும்.
12) பாதுகாப்பு பணிகளின் போது வசதிக்காக  18 லட்சம் ரூபாய் செலவில் ( MultiZone Door Frame Metal  Detector )  நான்கு  கருவிகள் வாங்கப்படும்.
13)  இரவு நேர ரோந்து  பணிகளில்  சிறப்பாக பணியாற்ற 18 லட்சம் ரூபாய் செலவில் ( Night  Vision  Binoculars )   மூன்று  கருவிகள் வாங்கப்படும்.
14) பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போது கண்ணிவெடிகளை கண்டுபிடுப்பதற்கு ஏதுவாக  16 லட்சம் ரூபாய் செலவில்  ( Mini   Sweepers ) கருவிகள் நான்கு வாங்கப்படும்.
15)  பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களின் பாதுகாப்பிற்காக, 15 லட்சம் ரூபாய் செலவில் ( Bullet Proof Helmets) -100  தலைக் கவசங்கள் வாங்கப்படும்.
16) மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுக்கேட்கும் சாதனங்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் கருவிகள் ( Debugging Scanners )   2 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு  வாங்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாமக்கல் மாவட்டம் - திரு. சக்தி கனெக்ஷன், IPS

51 திரு. சக்தி கனெக்ஷன், IPS – நாமக்கல் மாவட்டம் முகவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்பர் பர்ஸ்ட்டு ப்ளோர், நல்லிபாளையம் நாமக்கல் – 637003 தொலைபேசி – […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami