மதுரையில் புத்தாண்டில் பதியப்பட்ட வழக்குகள்

Admin

குடிக்க பணம் தர மறுத்த மனைவிக்கு பிளேடால்வெட்டு கணவரிடம் போலீஸ் விசாரணை

மதுரை ஜன 1மாடக்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜேஸ்வரி 32 .மகாலிங்கம் குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மகாலிங்கம் மனைவியை தாக்கி பிளேடால் வெட்டி உள்ளார்.இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ,கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடனை திருப்பி செலுத்திய பிறகும் அறைக்குள் பூட்டி சித்திரவதை அதிக வட்டி கேட்ட 2 பேர் கைது

மதுரை ஜன 1 கடனை திருப்பி செலுத்தியும் அறைக்குள் பூட்டி சித்தரவதை செய்து அதிக வட்டி கேட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர் . சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாசம் 45. இவர் தனது வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் வீரமனோகர் 35 என்பவரிடம் ரூபாய் 11 லட்சம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை அசலும் வட்டியும் சேர்த்து திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடுதல் வட்டி கேட்டு அவரை மிரட்டி கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடன்கொடுத்த வீரமனோகர் அவனியாபுரம் பெரியசாமி நகர் முதல் தெரு சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உடன் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்று மிரட்டி அவரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு பின்னர் அவரை அறைக்குள் வைத்து பூட்டி சித்திரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயப்பிரகாசம் கே. புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சித்திரவதை செய்த வீரமனோகர், வெங்கடேசன் இருவரையும் கைது செய்தனர்.


தொழிலில் நஷ்டம் கட்டிட காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை ஜன1 தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கட்டிட காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
மதுரை ஆண்டாள்புரம் டிவி காலனியை சேர்ந்தவர் அருண் கிருஷ்ணன் 30. இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார். கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்துள்ளார். ஆனால்லாபம் கிடைக்கவில்லை நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அருண் கிருஷ்ணன் திருப்பரங்குன்றம் பள்ளர் மேட்டுத்தெருவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அப்பா முத்துராமலிங்கம் கொடுத்த புகாரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தத்தனேரி சுடுகாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது

மதுரை ஜன 1 தத்தனேரி சுடுகாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் .இவர் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தத்தனேரி சுடுகாட்டில் போலீசாரை கண்டதும் 4 ஓடஆரம்பித்தனர். அவர்களை விரட்டிப் பிடித்து நடத்தியவிசாரணையில் ஜெனாய்நகர் டி.பி.சத்திரத்தை சேர்ந்த செல்வம் மகன் ரோகித்ராஜ்31, சென்னை மணலி லால் பகதூர் சாஸ்திரி ரோட்டை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா 26, தத்தனேரி அசோக் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ராஜா மகன் சத்யா பாண்டி21, தத்தநேரி கே.வி. சாலை பாரதிதாசன் தெருவை சேர்ந்த அங்குசாமி மகன் அருண் பாண்டியன்27என தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர் .அவர்கள் மறைத்து வைத்திருந்தது வாள்,கத்தி,அரிவாளை பறிமுதல்செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.


மதிச்சியத்தில் வீடு புகுந்து செயின்திருட்டு வேலைக்கார பெண் கைது

மதுரை ஜன.1மதிச்சியத்தில் வீடு புகுந்து செயின் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர் .
மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜ் .இவரது வீட்டில் வைத்திருந்த இரண்டு பவுன் செயின் திருட்டு போய்விட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார்.புகாரில் வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். மதிச்சியம் சப்பானி கோவில் தெருவைச் சேர்ந்த துர்காதேவி 18 என்ற அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த பெண்தான் திருடியது என்பது தெரிய வந்தது .அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2பவுன் சங்கிலியையும் மீட்டனர்.


சாந்தி நகரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி

மதுரை ஜன 1 சாந்தி நகரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார்.
ஆனையூர் முகாமை சேர்ந்தவர் கணேசமூர்த்தி31. இவர் சாந்திநகர் பாலத்தில் பைக் ஓட்டி சென்றார். அப்போது தினமணி நகரைசேர்ந்த முத்து மணி என்பவர் ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதிவிபத்தானது.இந்த விபத்தில் கணேசமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை கிரைம்ஸ் 02/01/2022

748 மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 30 பேர் கைது கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452