தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் விழா, SP டாக்டர்.R. சிவகுமார் தலைமை

Admin

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று அகத்தியர் பிறந்தநாளில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பாக இந்த விழா கொண்டாடப்பட்டது.

இன்று புதன்கிழமை மதியம் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் இந்த விழா மத்திய அரசின் அசதிகா அரூத் மகார்வுற்சிவ் (Azathika Amruth Mahourchav) திட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றது. காவல்துறையினர் மற்றும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் பயிற்சியகத்தை சேர்ந்த 500 பேருக்கு சித்தமருந்தகள் அளிக்கப்பட்டது.

வருகின்ற குளிர்காலத்தில் கவனத்தில் கொண்டு 6 சித்த மருந்துகள் சுவாச நோயை போக்குவதற்காக, தோல்வியாதி குணப்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டு இந்த மருந்து பெட்டகத்தில் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தாம்பரம் சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர். மீனாகுமாரி, மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியகத்தின் துணை இயக்குனர் டாக்டர்.R. சிவகுமார் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய  தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவண்ணாமலை SP திரு.பவன் குமார் அவர்களின் அதிரடி ஆய்வு

826 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வந்தவாசி காவல் வட்ட அலுவலகம், தேசூர் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452