கோவை கிரைம்ஸ் 02/01/2022

Admin
மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 30 பேர் கைது
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்  உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 30 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 178 மது பாட்டில்கள் மற்றும் 55 லிட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் அடிதடி குற்றவழக்கு குற்றவாளியான மதன கிருஷ்ணன் என்பவரின் மகன் சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் படி தொடர் வழிப்பறி மற்றும் அடிதடி குற்றவழக்கு குற்றவாளியான சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முபாரக் அலி(வயது-52) மற்றும் தியாகராஜன் (வயது-37) ஆகியோர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 31.12.2021 அன்று தியாகராஜன் குடிபோதையில் வந்து கையில் அரிவாளுடன் அவரது பெற்றோரிடம் தகராறு செய்து தொந்தரவு செய்துள்ளார். இதை நேரில் பார்த்த முபாரக் அலி மனைவி ரஹமத் நிஷா அவரது கணவரிடம் இதனை தெரிவித்தார். இதைக்கேட்ட முபாரக் அலி சம்பவ இடத்திற்கு சென்று தியாகராஜனை விசாரித்தார், இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தியாகராஜன் முபாரக்அலியை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் தாக்கி உள்ளார். இது சம்பந்தமாக முபாரக் அலி கோட்டூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகனான தியாகராஜன்(வயது-37) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

வீடு புகுந்து கொள்ளை, 1 கைது 
கோவை மாவட்டத்தில் தொடர் வீடு புகுந்து கொள்ளை வழக்கில் ஈடுபடுபவர்களை விரைந்து கண்டு பிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் திரு. கவியரசு அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தொடர் வீடு புகுந்து கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சென்னை, கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் மாணிக்கராஜ்@ராஜ்(வயது-36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 பவுன் தங்க நகைகள், ரூபாய் 1,00,000/- மற்றும் Tap-1 பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

துரிதமாக புலன்விசாரணை, 13 லட்சத்துடன் சிறுவர்கள் மீட்பு

735 கோவை : கோவை மாநகரம் காலை 0900 மணிக்கு, போத்தனூர் காவல்நிலையத்தில் அபுதாகீர் த.பெ.பாவா,  என்பவர் தனது மகன் முகமது சபீர் மற்றும் திருமறை நகரை […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452