காவலர் தினம் டிசம்பர் 24 ஐ முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் உணவு விநியோகம்

Admin

நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர் தினம் டிசம்பர் 24-ஐ தினத்தை முன்னிட்டு சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளி திருநங்கைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக அம்பத்தூர் சரக காவல் உதவி ஆணையர் கனகராஜ் அவர்கள் கலந்து கொண்டு (24.12.2021) வெள்ளிக்கிழமை மதியம் 1:00 மணி அளவில் மதிய உணவு வழங்கினார். அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் சிக்னல், பாடி ரவுண்டானா மேம்பாலம் ஆகிய பகுதிகளில் கைகளை சுத்தப்படுத்தி சமூக இடைவெளியை ஏற்படுத்தி முகக் கவசம், பிரியாணி, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் உதவி ஆணையர் திரு.கனகராஜ் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். மிகுந்த பணி சிரமங்களுக்கு இடையே, பொதுமக்களுக்கு ஆதரவாக காவல்துறை என்றும் துணை நிற்கும் என்ற கோட்பாட்டினை வலியுறுத்தும் விதமாக காவல் உதவி ஆணையர் திரு.கனகராஜ் காவலர் தினத்தில் கலந்து கொண்டு, சாலை ஓரம் உள்ள மக்களை இன்முகத்துடன் அரவணைத்து உணவு வழங்கியதை அங்கு கூடிய அனைவரும் பாராட்டினர். காவல் உதவி ஆணையர் திரு.கனகராஜ் பொதுமக்களை அணுகும் முறை, குற்றங்களை விசாரிக்கும் முறை, சக காவலர்களை அரவணைத்து செல்லும் முறை குறித்து குறித்து அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

755 திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட முக்கிய பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452