மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர்

Admin
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கிங்ஸ் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் திருநெல்வேலி ஆணழகன் மற்றும் ஆண்கள் உடல் அமைப்பு போட்டி 19.12.2021 அன்று பாளையங்கோட்டயில் நடைபெற்றது. இதில் மாஸ்டர் பிரிவில் பலர் கலந்து கொண்ட நிலையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் திரு. ஸ்டீபன் ஜோஸ் அவர்கள் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்ததின் மூலம் 02.01.2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் காவல் ஆய்வாளர் திரு. ஸ்டீபன் ஜோஸ் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.முதல் இடம் பிடித்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்து மாவட்ட காவல் துறைக்கு பெருமை சேர்க்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனிதநேய காவல் பணிக்கு திருவாரூர் SP பாராட்டு

739 திருவாரூர் : நீடாமங்கலம் காவல் சரகம் நீடாமங்கலம் கடைத்தெருவில் இன்று (20.12.2021) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆறு மாத கைக்குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் நின்றுகொண்டிருந்த பெண்ணை நீடாமங்கலம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452