ஆக்சிஸ் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் காவல்துறையினருக்கு வழங்கும் விபத்து காப்பீடு சலுகைகள்

Admin

தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் சம்பளமானது கடந்த 15 வருடங்களாக, அவரவர் வங்கி கணக்கிற்கு ECS (Electronic Clearing System) மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், காவல்துறை ஆளிநர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும், ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, அதன் மூலம் அரசு வழங்கும் சம்பளம் மற்றும் இதர படிகள் பெற்று வருகின்றனர்.

ஆக்சிஸ் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் காவல்துறையினருக்கு வழங்கும் விபத்து காப்பீடு தொகை தலா ரூ.30 லட்சம், விபத்தில் இறந்த 2 காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு காவல் ஆணையர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை காவல் ஆளிநர்கள் தங்களது வங்கியில் சம்பள கணக்கை (Salary Account) வைத்துக் கொண்டால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக அறிவித்தனர்.

மேற்படி வங்கிகள் அறிவித்த சலுகைகள்
1. தனிநபர்விபத்து காப்பீடு – ரூ.30 லட்சம் வரை
2. உடல் நிரந்தர ஊனமடைந்தால் – ரூ.30 லட்சம் வரை
3. காவல் ஆளிநர் மரணமடைய நேரிட்டால் அவரது வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை – ரூ.1 லட்சம் (வருடத்திற்கு)
4. 0 பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்துக் கொள்ளலாம். மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்பத்தில் 3 பேருக்கு இதே அக்கவுண்ட் வசதி அளிக்கப்படும்.
5. மேற்படி டெபிட் கார்டு பயன்படுத்தி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். சேவை கட்டணம் கிடையாது.
6. செக் புக், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இலவசம்.
7. கட்டணமில்லா ஆன்லைன் வங்கி பணபரிவர்த்தனை செய்யலாம்.
8. தனிநபர், வாகனம் மற்றும் வீட்டுக்கடன் வழங்கப்படும்.
மற்றும் பல வசதிகள் அளிப்பதாக தெரிவித்தனர்.

அதன்பேரில், மேற்படி வங்கி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், மேற்படி 3 வங்கி நிர்வாகத்தினரும் கடந்த 2017ம் ஆண்டு காவல் ஆணையரகத்தில் சிறப்பு முகாம் நடத்தினர். இம்முகாமில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிகளில் தங்களது சம்பள கணக்கை வரவு வைத்துக் கொண்டு, இச்சலுகையில் சேர்ந்தனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து வந்த எம்.முரளிகுமார் (26) ஆயுதப்படை காவலர் (கா.எண்.41885) (2013 பேட்ச்) என்பவர் கடந்த 01.12.2017 அன்று வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர், ஆக்சிஸ் வங்கி, சென்னை ஆர்.ஏ.புரம் வங்கிக் கிளையில் தனது சம்பளக் கணக்கை வைத்திருந்தார்.

மேலும், காவல்துறை கூடுதல் இயக்குநர், தொழில்நுட்பப் பிரிவை தலைமையிடமாகக் கொண்டு, தேனி மாவட்டம் தனிப்பிரிவில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் கோபி கண்ணன் (2010 பேட்ச்) என்பவர் கடந்த 05.6.2017 அன்று வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர் ஆக்சிஸ் வங்கி, தாம்பரம் கிளையில் தனது சம்பள கணக்கை வைத்திருந்தார். மேற்படி 2 பேரும் ஆக்சிஸ் வங்கியில் தங்களது சம்பள கணக்கை வைத்திருந்ததால், அவர்களுக்கு விபத்து காப்பீடு தொகை அளிக்க ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்பேரில், ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் திருமதி.நிதி அரோரா, Product Head – Defence & Police, திரு.அரிக்குமார், Circle Head மற்றும் நிர்வாகத்தினர் இன்று (14.6.2018) சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களை சந்தித்து, காவல் ஆணையர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் மூலம் இறந்த காவலர் முரளிகுமாரின் தாயார் எம்.சரஸ்வதி மற்றும் உதவி ஆய்வாளர் கோபிகண்ணனின் மனைவி திருமதி.மோகனப்பிரியா ஆகியோருக்கு காப்பீடு தொகை தலா ரூ.30 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிப்பு

457 கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து மணல்கள் லாரி மூலம் அள்ளப்பட்டு சேமிப்பு கிடங்கில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452