இருப்புப்பாதை பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Admin

கடலூர்: கடலூரில் இருப்புப்பாதை பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 07.04.2018 அன்று, விருத்தாசலம் இருப்புப்பாதை நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திருமாளவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

வைகை, குருவாயூர் விரைவு இரயில்களில் சென்ற பயணிகள் மற்றும் நடைமேடையில் காத்திருந்த பயணிகளிடம் பாதுகாப்பான இரயில் பயணம், ஜன்னல் ஓரமாக அமரும் பெண் பயணிகள் தங்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவது, ஆபத்தான வகையில் ஓடும் இரயிலில் ஏறுதல் மற்றும் இறங்குதலை தவிர்ப்பது, படியில் அமர்ந்து பயணம் செய்வதை தவிர்ப்பது, இரயில் பாதையை கடக்கும்போது இருபுறமும் கவனித்துக் கடப்பது, செல்பேசியில் பேசியபடி இருப்புப்பாதையை கடந்து செல்லக் கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை உதவி ஆய்வாளர் திரு.சின்னப்பன் அவர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் பயங்கரம் சொத்து தகராறில் 2 பேர் வெட்டிகொலை

60 கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் துரை என்கிற கணேசன். இவருக்கும் இவரது தம்பியான சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்கிற ராஜா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452