இறந்த தலைமை காவலர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி

Prakash

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் திரு. ராஜ்குமார் என்பவர் கொரொணா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த 27.4. 2021 ஆம் தேதி இறந்தார். மேலும் கடலூர் முதுநகர் காவல் நிலையம் தலைமை காவலர் திரு.அரங்கநாயகம் என்பவர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 13.5.2021 ஆம் தேதி இறந்தார்.

கொரோனாவில் இறந்துபோன இரண்டு தலைமை காவலர்களின் குடும்பத்தார்க்கு உதவும் நோக்கில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து கொடுத்தனர்.

இத்தொகையை பாதிக்கப்பட்ட தலைமை காவலர்களின் குடும்பத்தாருக்கு சமமாக வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.ம.ஸ்ரீ அபிநவ், இ.கா.ப., அவர்கள் உத்தரவு பிறப்பித்ததின்பேரில்இன்று 4.6.2021 தேதி அருள்குமாரி, வயது 39, க/பெ அரங்கநாயகம்,59, கிழக்கு தெரு,கச்சிராயநத்தம், கொட்டேரி போஸ்ட்,விருத்தாச்சலம். அவர்களிடம் 18,18,446 ரூபாய்க்கான காசோலையை கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி K சாந்தி அவர்கள் வழங்கினார்.இறந்துபோன அரங்கநாயகத்துக்கு தன்ஷிகா வயது 2, தருண்குமார் வயது 2, ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பாதிக்கப்பட்டஅலமேலு வயது 40,க/பெ ராஜ்குமார், குடும்பத்தாருக்கு ரூபாய் 18,18,445 காசோலை சிதம்பரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்திரு. லாமேக் அவர்கள வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வலைதளங்களில் பணம் பறிக்கும் கும்பல்

235 திருநெல்வேலி:  சமூக வலைதளங்களில் வீடியோகால் மூலம் தொடர்புகொண்டு பல்வேறு விதங்களில் பேசி (Sex Chatting) அதைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு உங்களை மிரட்டி பணம் பறிக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!