தமிழகத்தின் 18 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்

Admin

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டல இணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

6 பேர் பணி இடமாற்றம்
சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்த திரு.டி.அன்பு, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றப்பட்டார்.

உளவுப்பிரிவு டிஐஜியாக இருந்த திரு.ஜோஷி நிர்மல் குமார் திண்டுக்கல் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் டிஐஜி திரு.கார்த்திகேயன் கோவை டிஐஜியாகவும்,

திருச்சி டிஐஜி திருமதி.பவானீஸ்வரி கடலோர காவல் குழும டிஐஜியாகவும்

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் விழுப்புரம் டிஐஜியாகவும்,

விழுப்புரம் டிஐஜியாக இருந்த திரு.பாஸ்கரன் வேலூர் சிறைத்துறை டிஐஜியாகவும்,

பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

4 பேர் பதவி உயர்வு
டெல்லியில் அயல்பணியில் உள்துறையில் ஐபியில் கூடுதல் துணை இயக்குனராக பதவி வகிக்கும் திரு.அவினாஷ்குமார் அதே துறையில் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக பதவி வகிக்கிறார்.

டெல்லியில் அயல் பணியில் உள்துறை கூடுதல் துணை இயக்குனராக பதவி வகிக்கும் திரு.கே.செந்தில் வேலன் சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே அயல் பணியில் நீடிக்கிறார்.

டெல்லியில் அயல்பணியில் சிபிஐ எஸ்.பியாக பதவி வகிக்கும் திரு.அஸ்ரா கார்க் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே துறையில் பதவி வகிக்கிறார்.

சிபிஐ. பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி திரு.துரை குமார், அதே துறையில் டிஐஜியாக தொடர்கிறார்.

 

8 பேர் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்

சென்னை போக்குவரத்து கிழக்கு மண்டல துணை ஆணையர் திருமதி.மகேஷ்வரி, பதவி உயர்வு பெற்று சென்னையின் தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி செந்தில்குமாரி, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் அலுவலக நிர்வாக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிபிசிஐடி எஸ்பி ஆசியம்மாள் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி- யாக பணிபுரிந்த ராதிகா, அதே துறையில் டிஐஜியாக தொடர்கிறார்.

சென்னை சைபர் செல் சிபிசிஐடி எஸ்பியாக பதவி வகிக்கும் திரு.ஏஜி.பாபு சென்னை காவல் ஆணையர் அலுவலக தலைமையிட டிஐஜியாகவும்,

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை தலைமையிட எஸ்.பியாக பதவி வகித்து வந்த திருமதி.லலித லட்சுமி டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருச்சி டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பில் காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த திருமதி.ஜெயகவுரி பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை ஆயுதப்படை டிஐஜியாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

ஆவடி சிறப்பு காவற்படை இரண்டாவது பட்டாலியன் கமாண்டண்ட் திருமதி.காமினி பதவி உயர்வு வழங்கப்பட்டு ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கபட்டுள்ளார்.

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி மாற்ற ஆணையை மார்டி வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தவறான ஊடக சித்தரிப்புக்கு உள்ளான, ASP செல்வநாகரெத்தினம் IPS, நடந்தது என்ன?

88 தூத்துக்குடி: 20.02.2018 அன்று தூத்துக்குடியில் கலவரம் செய்ய விறகு கட்டைகளுடன் வந்த கம்யூனிஸ்ட் ரவுடிகளை கதற விட்ட தூத்துக்குடியின் நேர்மையான, இளம்தைரியமான ASP செல்வநாகரெத்தினம் IPS […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452