கடலூரில் டீக் கடை உரிமையாளரின் நேர்மையை பாராட்டி பரிசு

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் யுவுஆ ல் ரூபாய் 40¸000 பணம் எடுத்துக் கொண்டு, சுப்புராயலு நகரில் உள்ள டீக் கடையில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்த போது பணப்பையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் தனது டீ கடை முன்பு கிடந்த ரொக்கப் பணத்தை கடை உரிமையாளர் செந்தமிழ்ச்செல்வன் மீட்டு திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார்.

காவல் ஆய்வாளர் மேற்கொண்ட விசாரணையில் அது பணத்தை தவற விட்ட ராஜேந்திரனுடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் IPS அவர்கள், ராஜேந்திரனிடம் பணத்தை ஒப்படைத்தார். மேலும் டீக்கடை உரிமையாளர் செந்தமிழ்ச்செல்வனின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வின் போது துணை காவல் கண்காணிப்பாளர் திரு நரசிம்மன் மற்றும் ஆய்வாளர் திரு உதயகுமார் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் பட்டப்பகலில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை

38 கடலூர்: விருத்தாசலத்தில் பெண்ணாடம் சாலை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்வர் ( 40). இவர் விருத்தாசலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452