கடலூரில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலெக்டர் ராஜேஷ் தேசியக்கொடி ஏற்றுகிறார்

Admin

கடலூர்: இந்தியா முழுவதும் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 8 மணிக்கு நடக்கிறது. விழாவில் கலெக்டர் ராஜேஷ் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து மாணவ– மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி நேற்று அரசு பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடந்தது.

முன்னதாக மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் பார்வையிட்டார்.

விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி, தியாகிகள் அமருவதற்காக பந்தல் அமைக்கும் பணி, கொடி, தோரணங்கள் கட்டும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடலூரில் குடியரசு தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று வெடி குண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அவர்கள் வெடி குண்டுகள் ஏதேனும் உள்ளதா? வெடி பொருட்கள் உள்ளதா? என்பதை நவீன கருவிகளை கொண்டு சோதனை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பதக்கம் பெற உள்ள தமிழகத்தை சேர்ந்த காவல் துறையினர்கள் விபரம்

60 குடியரசுத் தலைவர், பிரதமர் பதக்கம் ஆகியவை ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மத்திய, மாநில காவல் துறைகள், மத்திய காவல் ஆயுதப் படைகள், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452