கடலூரில் பட்டப்பகலில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை

Admin

கடலூர்: விருத்தாசலத்தில் பெண்ணாடம் சாலை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்வர் ( 40). இவர் விருத்தாசலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் அவருடைய மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவும் திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி நகைகளை காணவில்லை. அன்வரின் மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.7½ லட்சம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் காவல்துறையினர் விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளையும், அவர்கள் விட்டுச்சென்ற சில தடயங்களையும் சேகரித்தனர்.

மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் புரூனே வரவைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்டபடி பெண்ணாடம் சாலையில் சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேட்டையாடப்பட்ட கொக்குகளுடன் புகைப்படம் எடுத்து வனத்துறையினரிடம் மாட்டிகொண்ட வாலிபர்

41 கடலூர்: டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்ற தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீதும் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452