கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் திருட்டை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் ரெயில்வே போலீசார் வழங்கினர். இதற்கு ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். ஏட்டுகள் மோகன், சதீஷ், விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு, ரெயில் படிக்கட்டில் நின்ற படி பயணம் செய்யக்கூடாது, செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது, அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் குளிர்பானம், பிஸ்கெட் போன்ற எந்த பொருளையும் வாங்கக்கூடாது, நகைகளை அதிகமாக அணிந்து செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும், குறிப்பாக ரெயில் பயணத்தின் போது அதிமான நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் வழங்கினர். தண்டவாளத்தை கடந்து சென்ற பொதுமக்களிடமும் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. முன்னதாக சோழன் விரைவு ரெயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடமும் துண்டுபிரசுரத்தை ரெயில்வே காவல்துறையினர் வழங்கினர்.
சான்றிதழ் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளர் கைது கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை
Fri Oct 28 , 2016
71 கடலூர்: கடலூர் பழையவண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (53). விவசாயி. இவருடைய மாமனார் தண்டபாணி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் குணசேகரன் தன்னுடைய […]