கடலூர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, 16 பேருக்கு கடுமையான தண்டனை?

Admin

கடலூர்: கடலூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேர் காணவில்லை என பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், இரு மாணவிகளையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கண்டுபிடித்து மீட்டனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மாணவிகள் இருவரையும், திட்டக்குடி பகுதியில் வசிக்கும் பாதிரியார் அருள்தாஸ் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அதிரிச்சி தகவல் கிடைத்தது.

இதையடுத்து வடலூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷ்குமார், திட்டக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி, லட்சுமி, கலா, ஜெமீனா, பாத்திமா, அன்பு உள்ளிட்ட பலரிடமும் மாறி மாறி விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்ததை அடுத்து அவர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி, 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

கைது செய்த 30 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என கடந்த வாரம் கடலூர் நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகளில் 8 பேர் பெண்கள், 8 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் தண்டனை விபரம் இன்று திங்கள்கிழமை (ஜன.7) அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பில், பள்ளி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று தெரிவித்த நீதிமன்றம், குற்றவாளிகளான தனலட்சுமி, கலா, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 42 வருட சிறை தண்டனையும், ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டைனையும், செல்வராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், மோகன்ராஜ், மதிவாணன் ஆகிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாரதிரியார் அருள்தாஸு 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் பரிசு பெற்ற ஊர்க்காவல் படை வீராங்கனை

45 கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் இடத்தை பெற்றார். அவரை கௌரவிக்கும் வகையில் கரூர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452