‘காவலர் அங்காடி’ செயலி, டி.ஜிபி.ராஜேந்திரன் அறிமுகப்படுத்தினார்

Admin

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் வனத்துறையில் பணிபுரியும் சீருடை அலுவலர்கள், ஓய்வுபெற்ற சீருடை அலுவலர்கள் என மொத்தம் சுமார் 1.5 லட்சம் பயனாளிகள் தமிழ்நாடு காவல் அங்காடியில் சேர்ந்து பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

தமிழக அரசு ரூ.7.80 கோடி செலவில் அனைத்து மாவட்ட தலைமையிடங்கள், 15 சிறப்பு காவல் படையணிகள் மற்றும் தமிழ்நாடு காவல் பயிற்சியகம், ஊனமாஞ்சேரி, சென்னை என தமிழகம் முழுவதும் 50 இடங்களில் தமிழ்நாடு காவல் அங்காடிகளை துவக்க ஆணையிட்டு அவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாடு காவல் அங்காடியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனம் மற்றும் மின்னணுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் மலிவான விலையில் பயனாளிகளுக்கு விற்பணை செய்யப்படுகிறது.

இதுவரையில் தமிழ்நாடு காவல் அங்காடியின் பயனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க, காவல் அங்காடிகளுக்கு நேரிடையாக சென்று அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரத்தை அறிந்து அதன்பிறகு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

முதற்கட்டமாக, பாயனாளிகள் அனைவரும் தமிழ்நாடு காவல் அங்காடிகளில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை தங்கள் அலைபேசியின் வாயிலாக அறிந்து பயன்பெறும் வகையில் காவலர் அங்காடி என்ற செயலியை காவல்துறை தலைமை இயக்குநர் T.K.ராஜேந்திரன், IPS அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இச்செயலின் செயல்பாட்டினை மேலும் விரிவுபடுத்தி பயனாளிகளுக்கு மேலும் சிறப்பான சேவையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த காவலர் அங்காடி என்ற செயலியை tnpolicecanteen.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்தும், கூகுள் பிளே ஸ்டாரில் பதிவிறக்கம் செய்தும் அல்லது ஆப் ஸ்டோர் அடுத்துவாரம் முதல் பதவிறக்கம் செய்தும் தமிழ்நாடு காவல் அங்காடியில் விற்கப்படும் அனைத்து பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை அறிந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

696 நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 6 ஐபிஎஸ் அதிகாரிகள், 1 காவல் உயர் அதிகாரி உட்பட 7 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452