காவலர் வீரவணக்கம் நாளில் கண்கலங்கிய பிரதமர் மோடி

Admin

பணியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளையொட்டி பிரதமர் மோடி, டெல்லி உள்ள சாணாக்கியபுரியில் அக்டோபர் 21 அன்று மரியாதை செலுத்தினார்.

அப்போது மறைந்த காவலர்களுக்கான நினைவுச்சின்னத்தை திறந்து வைத்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவலர்களின் சிறந்த சேவையினால் தான் நாட்டில் அமைதி பரவி இருக்கிறது என காவலர்கள் வீரவணக்க தினத்தில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரின் கடினப் பணிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அவர்களின் தியாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு கண்கலங்கினார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்கள் வீரவணக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ஆம் ஆண்டு லடக் பகுதியில் சீனப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 மத்திய காவல் படை அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். இதை நினைவுகூரும் வகையிலேயே இந்த தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1959 ஆண்டு முதல் இதுவரை வீரமரணம் அடைந்த 34,800 காவலர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் தில்லி சானக்யாபுரி பகுதியில் எழுப்பப்பட்டுள்ளது. இது 30 அடி உயரம், 238 டன் எடை கொண்டதாகும். வீரமரணம் அடைந்த காவலர்களை கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இத்துடன் தேசிய காவலர் அருங்காட்சியகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, சமூகத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிவதற்கு உங்களுடைய செயல்பாடுகளே காரணம். தேசத்தில் பாதுகாப்பின்மை மற்றும் அச்சத்தை உண்டாக்கும் முயற்சிகள் உங்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய சேவையினால் தான் நாட்டில் அமைதி பரவி இருக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடும் காவலர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டி வரும் காவலர்கள் அனைவரையும் நினைவுகூரவேண்டிய தினம் இது. நக்ஸல் பாதிக்கப்பட்ட இடங்களில் பணியில் இருக்கும் காவலர்கள் சிறந்த சேவையை செய்து வருகின்றனர். அவர்களால் தான் நக்ஸல்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை குறைந்து, இளைஞர்கள் பொதுதளத்துக்கு வருகின்றனர் என்றார்.

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர். அதன்பின் காவலர்களை போற்றும் வகையில் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் கிரென் ரிஜூஜூ மற்றும் ஹன்ஸ்ராம் ஜி அஹிர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய ஆயுதப்படை காவல்துறையினர் உட்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக காவல்துறையினருக்கு மினி மாரத்தான் போட்டி

103 திருநெல்வேலி : 38ம் ஆண்டு காவலர் வீர வணக்க நாள் திருநெல்வேலியில் 21.10.2018ம் தேதியன்று காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாநகர துணை […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452