கும்பகோணத்தில் 10 நபர்களை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் .

Admin

தஞ்சாவூர் : வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக தங்கும் விடுதிகளில் யாரும் தங்க அனுமதி கிடையாது என்கின்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக்சேகர் சஞ்சய் – ஐபிஎஸ் அவர்கள்
உத்திரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் மற்றும் தனிப்படை போலீசார் கும்பகோணம் பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர் .

இந்நிலையில் இன்று அதிகாலை வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்

கும்பகோணம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான தனிப்படை போலிஸார் கும்பகோணம் பாலக்கரை அருகே உள்ள ரிவர் வீவ் ஓட்டலில்
சீட்டாட்டம் ஆடிய 10 பேரை இன்று 9.5.2021 ம் தேதி அதி காலையில் கைது செய்து அவர்கள் வைத்திருந்த
பணம் ரூ. 25, 030 /- ,மற்றும்
11 செல்போன்கள் ப‌றிமுத‌ல் செய்து அவர்களை
கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்கள்.


நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோழபுரம் அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் தனிப்படை போலீசாரால் கைது

865 தஞ்சாவூர் : வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக நாளை முதல் 10-5-2021* 24-5-2021 டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது என்கின்ற அறிவிப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!