கொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்

Admin 1

சென்னை : ஒருவருக்கு கொரானா நோய் தொற்று ஏற்பட்டு, நோயின் வீரியம் அதிகரித்தால், அவர்கள் மரணத்தின் விளிம்பிற்கு, சென்றுவிட்டு வருவார்கள். சிலர் மரணித்தும் விடுவார்கள். பொதுமக்களை பாதுகாக்கும் உன்னத பணியில் காவல்துறையினர் வெளியே சுற்றுவதால், கொரானா அவர்களையும், விட்டுவைப்பதில்லை. தமிழகத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரானா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சைபெற்று வெற்றிகரமாக மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.

சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் உயர்திரு. ஜவஹர் ஐபிஎஸ் அவர்கள், நேற்று காலை அமைந்தகரை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரானா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பிய காவல் அதிகாரிகளை வரவேற்று, வாழ்த்தி, பாராட்டினார்.

இதன்படி அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.நசீமா பானு, அரும்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.சங்கர், பெண் தலைமை காவலர் பிரேமா தலைமை காவலர் திரு.ராஜசேகர் மற்றும் தலைமை காவலர் திரு.சரவணன் ஆகியோர் ஆகியோர்களை மலர்கொத்து மற்றும் பழங்கள் கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினர்.

நோயிலிருந்து மீண்டு வந்த அரும்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.சங்கர் பேசும்போது அனைவரும் கண்டிப்பாக வெளியே வரும்போது, முகக் கவசம் அணிந்து தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முகமது மூசா


One thought on “கொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆயுதப்படை வளாகத்தில் புதிய ATM, காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

737 தூத்துக்குடி : தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய தானியங்கி (ATM Centre) பண […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!