சிதம்பரத்தில் சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த முதியவர், தீவிரமாக செயல்பட்டு தீயணைப்பு படையினர் மீட்டனர்

Admin

கடலூர்: சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சையத் சமீர் அகமது(65). இவரது வீட்டு முன்பு சுமார் 35 அடி ஆழம் கொண்ட தரைக்கிணறு உள்ளது. இந்த கிணறு சிமெண்டு சிலாப் மூலம் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் சையத் சமீர்அகமது கிணற்றின் மேல் போடப்பட்டிருந்த சிமெண்டு சிலாப் மீது ஏறி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த சிமெண்டு சிலாப் திடீரென உடைந்து கிணற்றுக்குள் விழுந்தது. மேலும் அதில் நின்று கொண்டிருந்த சையத் சமீர் அகமதுவும் கிணற்றுக்குள் விழுந்தார். தொடர்ந்து அவர் தண்ணீரில் தத்தளித்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த சத்தம் கேட்ட சையத் சமீர் அகமதுவின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால், சையத் சமீர் அகமதுவை மீட்க முடியவில்லை.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கயிறு மற்றும் ஏணியின் மூலமாக சையத் சமீர் அகமதுவை உயிருடன் மீட்டனர். இதில் அவரது இடது கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் சிதம்பரத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

55 தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி என்னும் ஆழிபேரலை எச்சரிக்கை ஒத்திகை பயிற்சிகள் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இத்தகைய ஒத்திகை பயிற்சியால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452