தமிழகத்தில் 8 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 22 IPS அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம்

Admin

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பல துணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வுப்பெற்று ஏஎஸ்பிக்களாக இருந்த காவல் அதிகாரிகள் எஸ்பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர சில எஸ்.பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள்:

1. ஸ்ரீ அபினவ் கன்னியாகுமரி தக்கலை சப்டிவிஷன் ஏஎஸ்பியான இவர் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து (கிழக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

2. என்.எஸ்.நிஷா சிதம்பரம் சப்டிவிஷன் ஏஎஸ்பியான இவர் எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. சாய்சரண் தேஜஸ்வி குலச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பியான இவர் எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னைஇ புளியந்தோப்பு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

4. ராவேளி பிரியா கந்தபுனேனி திருவண்ணாமலை சப்டிவிஷன் ஏடிஎஸ்பியாக இருக்கும் இவர் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று வண்ணாரபேட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. தூத்துக்குடி சப்டிவிஷன் ஏஎஸ்பியாக உள்ள செல்வநாகரத்தினம் எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

6. ஈரோடு, சிறப்பு அதிரடிப்படை ஏஎஸ்பியாக இருக்கும் கே.பிரபாகர் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் கட்டுப்பாட்டறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7. திண்டுக்கல், அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பியாக இருக்கும் எஸ்.எஸ்.மகேஷ்வரன் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்ட்டாக மாற்றப்பட்டுள்ளார்.

8. பெண்களுக்கெதிரான ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு ஏஎஸ்பியாக இருக்கும் வி.ஷியாமளா தேவி எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை டிஜிபி அலுவலக ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

 

பணியிட மாற்றம் அடைந்துள்ள காவல் உயர் அதிகாரிகள்:

9. திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருக்கும் பர்வேஷ் குமார் சிபிசிஐடி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

10. புளியந்தோப்பு துணை ஆணையராக இருக்கும் சி.ஷியாமளா தேவி ஒருங்கிணைந்த அமலாக்க குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

11. ஒருங்கிணைந்த அமலாக்க குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருக்கும் சாந்தி ஊனமஞ்சேரி போலீஸ் அகடாமி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

12. ஊனமஞ்சேரி போலீஸ் அகடாமி எஸ்பி சாமூண்டீஸ்வரி மாற்றப்பட்டு சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

13. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் செஷாங் சாய் அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

14. அடையாறு துணை ஆணையராக இருக்கும் ரோஹித் நாதன் ராஜகோபால் சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

15. சென்னை ரயில்வே எஸ்பியாக இருக்கும் ஜார்ஜ் ஜார்ஜ் சேலம் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

16. சேலம் எஸ்.பியாக இருக்கும் ராஜன் சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

17. ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருக்கும் ஜி.ஸ்டாலின் சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

18. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி சம்பத்குமார் வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

19. டிஜிபி அலுவலக ஏஐஜியாக இருக்கும் கண்ணம்மாள் சென்னை (மத்திய) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

20. சென்னை (மத்திய) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருக்கும் ஜெயலட்சுமி சென்னை (மேற்கு) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

21. சென்னை (தெற்கு) லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருக்கும் சரோஜ் குமார் தாகூர் திருச்சி ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

22. திருச்சி ரயில்வே எஸ்பியாக இருக்கும் ஆன்னி விஜயா போதைப்பொருள் கடத்தல் புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்

23. சென்னை போதைப்பொருள் கடத்தல் புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருக்கும் என்.தேவராஜன் எஸ்.பி, சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

24. திருப்பூர் மாவட்ட எஸ்பியாக இருக்கும், எஸ்.உமா திருப்பூர் நகர போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

25. திருப்பூர் நகர போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு எஸ்பியாக இருக்கும் எ.கயல்விழி திருப்பூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

26. திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருக்கும் சக்திகணேசன் ஈரோடு மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்

27. ஈரோடு மாவட்ட எஸ்.பி டாக்டர்.ஆர்.சிவகுமார் சென்னை போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

28. சென்னை போக்குவரத்து(மேற்கு) துணை ஆணையர் ஈஸ்வரன் அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

29. அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

30. தமிழ்நாடு சிறப்பு காவற்படை பட்டாலியன் -3 வீராபுரம் கமாண்டண்டாக இருக்கும் அந்தோணி ஜான்சன் ஜெயபால் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் -2 சென்னை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்ட்டி பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அதிமுக பிரமுகர் கொலை கடலூரில் பரபரப்பு காவல்துறையினர் குவிப்பு

88 கடலூர்: சுருக்கு வலையை பயன் படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் கிராம மீனவர்களுக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452