தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் அடைந்த அதிகாரிகள் விபரம் பின்வருமாறு

1. ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் அபின் தினேஷ் மோடக் சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

2. விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் எஸ்பி நிஷா பார்த்திபன் சென்னை சிபிசிஐடி-3 எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

3. சென்னை சிபிசிஐடி-3 எஸ்பியாக இருக்கும் பிரவேஷ்குமார் வேலூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

4. வேலூர் மாவட்ட எஸ்பியாக இருக்கும் பகலவன் சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக பதவி வகிக்கும் மகேந்திரன் தமிழ்நாடு சிறப்பு காவற்படை சென்னை 5 வது பட்டாலியன் கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு சிறப்பு காவற்படை சென்னை 5 வது பட்டாலியன் கமாண்டண்டாக பதவி வகிக்கும் ராஜசேகர் சிறு படைகலன் சென்னை பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் எஸ்.பி.துரை போக்குவரத்துக் காவல் (மேற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. போக்குவரத்துக் காவல்(மேற்கு) துணை ஆணையராக இருக்கும் சிவகுமார் சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. சென்னை காவல் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக உள்ள சாம்சன் பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

10. பூக்கடை துணை ஆணையராக உள்ள செல்வகுமார் கோவை நகரம் தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

11. கோவை நகரம் தலைமையிட துணை ஆணையராக உள்ள தர்மராஜன் சென்னை கியூபிராஞ்ச் சிஐடி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

12. சென்னை கியூபிராஞ்ச் சிஐடி துணை ஆணையராக உள்ள விக்ரமன் திருவாரூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

13. திருவாரூர் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

14. மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

15. கடலூர் மாவட்ட எஸ்பியாக உள்ள விஜயகுமார் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

16. ஈரொடு சத்யமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக உள்ள ஆர்.பாண்டியராஜன் கோவை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

17. கோவை மாவட்ட எஸ்பியாக உள்ள பா.மூர்த்தி ஈரோடு சத்யமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

18. திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக உள்ள பொன்னி திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

19. திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக உள்ள சிபிச்சக்ரவர்த்தி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் காவல் கண்காணிப்பாளருக்கு இடமாற்றம் புதிய கண்காணிப்பாளர் நியமனம்

166 கடலூர்: கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள் மாற்றம் திரு.விஜயகுமார் அவர்கள் கடலூர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு இடமாற்றம் அளித்து உத்தரவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452