தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிகள் அதிரடியாக இடமாற்றம், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

Admin

தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இடமாற்றம் குறித்த விபரம் பின்வருமாறு,

1. பெண்களுக்கான குற்றத் தடுப்பு மதுரை டிஎஸ்பி திரு.மகேந்திரன், மதுராந்தகம் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும்

2. தர்மபுரி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி திரு.சுப்பையா, சத்தியமங்கலம் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும்

3. திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி திரு.கங்காதரன், திருவள்ளூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும்

4. சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி திரு.விஸ்வநாத் ஜெயின், தரமணி உதவி ஆணையராகவும்

5. தரமணி உதவி ஆணையர் திரு.சுப்பராயன், பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

6. பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியான திரு.பன்னீர்செல்வம், மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையராகவும்

7. ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுக் குழு உதவி ஆணையர் திரு.கோவிந்தராஜு, பரங்கிமலை உதவி ஆணையராகவும்

8. பரங்கிமலை உதவி ஆணையர் திரு.மோஹன்தாஸ், மதுரை நகர குற்றப் பிரிவு உதவி ஆணையராகவும்

9. திருவள்ளூர் குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி திரு.கண்ணன், ராயபுரம் உதவி ஆணையராகவும்

10. ராயபுரம் உதவி ஆணையர் திரு.தனவேல், சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையராகவும்

11. சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் திரு.சச்சிதானந்தம், ஆம்பூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார்.

12. வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த திரு.ராமநாதன், விழுப்புரம், கள்ளக்குறிச்சி துணை மண்டல துணை கண்காணிப்பாளராகவும்

13. விழுப்புரம், கள்ளக்குறிச்சி துணை மண்டல துணை கண்காணிப்பாளராக இருந்த திருமதி.கோமதி, கடலூர் சரக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளராகவும்

14. திருவாரூர் மாவட்ட குற்றவியல் பிரிவு துணை கண்காணிப்பாளராக இருந்த திரு.நடராஜன், கடலூர் சரக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளராகவும்

15. தஞ்சாவூர் மாவட்ட குற்றவியல் பிரிவு துணை கண்காணிப்பாளராக இருந்த திரு.சந்திரசேகர், திருவாரூர் மாவட்ட திருதுறைபூண்டி துணை கண்காணிப்பாளராகவும்

16. புதுக்கோட்டை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு துணை கண்காணிப்பாளராக இருந்த திரு.ஐயனார், புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி துணை கண்காணிப்பாளராகவும்

17. சிவகங்கை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு துணை கண்காணிப்பாளராக இருந்த திரு.முருகேஷன், இராமநாதபுரம் மாவட்ட கீழைக்கரை துணை கண்காணிப்பாளராகவும்

18. சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக இருந்த திரு.இளங்கோவன், திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி துணை கண்காணிப்பாளராகவும்

19. கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளராக இருந்த திரு.ஆனந்தகுமார், கோவை(திருச்சி) மாவட்ட சி.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளராகவும்

20. கோவை(திருச்சி) மாவட்ட சி.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளராக இருந்த திரு.வெற்றிசெல்வன், கோவை மாவட்ட சிறப்பு நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராகவும்

21. திரு.ரவிசந்திரன் துணை கண்காணிப்பாளர், திண்டுக்கல் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராகவும்

22. சென்னை தலைமை அலுலக சிறப்பு பிரிவு சி.ஐ.டி. திரு.சுதர்சன், துணை கண்காணிப்பாளர், தமிழ்நாடு காமெண்டோ படை (2), சென்னை துணை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறை குறித்து அவதூறு பேச்சு எதிரொலி, 8 வழக்குகள்- கைதாகிறாரா எச் ராஜா?

157 சென்னை: காவல்துறை மற்றும் நீதிதுறைக்கு எதிராக அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452