தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நாள் அறிவிப்பு

Admin

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பிரிவிற்கு காலியாக உள்ள 309 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் 11.07.2018-ம் தேதி முதல் 10.08.2018-ம் தேதி வரை வரவேற்கப்பட்டது.

இப்பதவிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த ஆண்¸ பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர்களின் கணினி வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. மேலும் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பிரிவிற்கான எழுத்து தேர்வு வருகின்ற 30.09.2018-ம் தேதியன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படவுள்ளது.

சரிபார்க்கப்பட்ட விண்ணப்பதாரர்களில் தகுதி உள்ளவர்கள் எழுத்து தேர்விற்கான நுழைவு சீட்டினை www.tnusrbonline.orgஎன்ற இணையதளத்தின் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தமிழக காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறைதுறை துணை தலைவர் திரு.முருகேசன் வீட்டில் ரெய்ட் என்ற செய்திக்கு அவரின் தன்னிலை விளக்கம்

254 சிறைதுறை துணை தலைவர் திரு.முருகேசன் வீட்டில் ரெய்ட் என்ற செய்திக்கு அவரின் தன்னிலை விளக்கம் செய்தியை யார் முந்தி வெளியிடுவது என்ற போட்டியில் வேண்டாத நபர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452