தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை மதுரை போலீசார் விசாரணை

Prakash

மதுரை: மதுரை அனுப்பானடியில் பரிதாபம் தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை குடும்ப பிரச்சனை காரணமாக மதுரை ஜூலை 27 மதுரை அனுப்பானடியில் குடும்ப பிரச்சனை காரணமாக தாயும் மகனும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் செல்வேஸ்வரி 65. இவரது இளைய மகன் அருண் சக்கரவர்த்தி 28 .அருண் சக்கரவர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது .

அவருக்கு திருமணமாகி அடிக்கடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து தாய்செல்வேஸ்வரியுடன் தனியாக வசித்து வந்தார்.இவர்கள் இருவரும் குடும்பபிரச்சினையால் மன அழுத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் தாயும் மகனும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டன்ர்.

இதனால் தீயில் கருகி‌ ஆபத்தானநிலையில் உயிருக்குபோராடினர்.அவர்களை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை சரக DIG தலைமையில் உடற்தகுதி தேர்வு, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்பு

281 கோவை: கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!