தேர்தல் – டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்பு

Admin

தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.  ஏற்கனவே தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நீடிக்கும் நிலையில் தேர்தலுக்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இவர் தேர்தல் தொடர்பாக எந்தவொரு விஷயத்திலும் கலந்து கொள்ளக் கூடாது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசிப்பது, கூட்டம் நடத்துவது, முடிவுகள் எடுப்பது என ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் மக்களவை தேர்தல் முடியும் வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் டிஜிபியாக பதவியேற்ற பின்னர் அசுதோஷ் சுக்லா , தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வரவேண்டும். தமிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

IAS, IPS, IFS தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு DGP திரு.சைலேந்திர பாபு IPS பாராட்டு

24 இந்திய அளவில் நடைபெறும் இந்திய அரசின் உயரிய பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் இரயில்வே காவல்துறை DGP திரு.சைலேந்திர பாபு […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452