பெரும் மோதலை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது

Admin

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந்தேதி தேவனாம்பட்டினம் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது அவர்களை தேவனாம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தடுக்க முயன்ற போது அவரை தேவனாம்பட்டினம் மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்றனர். இது குறித்து உதவி-ஆய்வாளர் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தார்.

இந்த வழக்கில் நேற்று மேலும் 4 பேரை ஆய்வாளர் சரவணன் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.விக்ரமாதித்தன் (44), 2.சந்தோஷ்(21), 3.லெனின்(27), 4.உதயகுமார்(22). இவர்கள் 4 பேரும் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச்சேர்ந்தவர்கள். இவர்கள் சம்பவத்தன்று பயன்படுத்திய ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

26 சென்னை : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்இ கடந்த 23ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452