மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது

Prakash

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விளாச்சேரி அருகே கண்மாய் கரையோரப் பகுதியில் உள்ள செம்மண்ணை சட்ட விரோதமாக அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து., இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருப்பரங்குன்றம் காவல்துறையினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் விசாரணைக்காக காவல் துறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீசாரின் விசாரணையில் லாரியின் உரிமையாளர் பசுமலையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வயக்காட்டு சாமி 40, லாரி ஓட்டுநர் முனியாண்டி புரத்தைச் சேர்ந்த தவமணி என்பவரது மகன் சிவமூர்த்தி 30, ஓட்டுனருக்கு உதவியாக இருந்த கிளீனர் விளாச்சேரி சேர்ந்த பால்பாண்டி மகன் வீரபிரபு 22 ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்தும் விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் புரோக்கர்கள் கைது - 2

293  மதுரை:  மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அடுத்துள்ள மேலக்குயில்குடி பகுதியில் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு பெண்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!