வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக போலீஸ், தீயணைப்பு துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

Admin

கடலூர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள வட்டார, குறுவட்ட, கிராம அளவிலான குழுக்கள் குறித்தும், அந்த குழுக்கள் செயல்படும் இடங்கள் குறித்தும், குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்தும் கலெக்டர் ராஜேஷ் விளக்கி கூறினார்.

மேலும் இந்த குழுக்களுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்கும் இடங்களுக்கு அழைத்து வரச்செய்தல், வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகுக்க வேண்டும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நடத்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக கூடுதலாக பொக்லைன் இயந்திரங்கள், படகுகள், விளக்குகள் போன்றவற்றை உபயோகித்து வெள்ளம் ஏற்படும் போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணிகளை விரைந்து உயிர்சேதம் இன்றி மேகொள்ள வேண்டும். மாவட்டத்தில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை உடனே தெரிவிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து எந்தவித தொய்வும் இன்றி பயணியாற்ற வேண்டும் என கலெக்டர் ராஜேஷ் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஷர்மிளா மற்றும் தீயணைப்பு அலுவலர், கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து துறை தலைவர்கள், வருவாய்துறை அலுவார்கள், ஊராட்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல் பருவமழை குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மைய உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருவமழை காலத்தில் போதிய அளவி பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு வைத்து தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என கலெக்டர் ராஜேஷ் அறிவுரை வழங்கினார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மைய உரிமையாளர்கள் பகிர்ந்துகொண்டதுடன் இந்த ஆண்டிலும் மழைக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேலு உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மைய மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

56 கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் திருட்டை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் ரெயில்வே காவல்துறையினர் வழங்கினர். இதற்கு ரெயில்வே காவல் உதவி- […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452