வெறிச்சோடிய சாலைகள், கடலூர் காவல் துறையினர் தடுப்பு

Prakash

கடலூர்:   மே 24-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் துறை சரகத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி முக்கியமான இடங்களில் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் பால் விற்பனை மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிலையம் பகுதிகளில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் விருத்தாசலம் ஆய்வாளர் விஜயரெங்கன்‌  போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர்  தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கிய காவல்துறை

238 மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்படைப்பு, தும்பை பட்டி ,பூஞ்சுத்தி மற்றும் மேலூர் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!