147 வழக்குகள் 147 வாகனங்கள் பறிமுதல்

Prakash

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது

அந்த வகையில் இன்று 26.05.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் 147 வழக்குகள் பதிவு செய்தும் அவற்றில் 145 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முக கவசம் அணியாமல் வந்த 111 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இருந்த 10 நபர்கள் என மொத்தம் 121 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கை காவல்துறை

292 மதுரை: மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செக் போஸ்ட்களை ஆய்வு செய்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.சுஜித்குமார்,IPS., அவர்கள், ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!