சிறைதுறை காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

Admin

சென்னை: சென்னை புழல், திருச்சி, கோவை மற்றும் சேலம் சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் 4 பேருக்கு பணியிட மாற்றம் மற்றும் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பணியிட மாற்றம் அடைந்தோர்,

சென்னை, புழல் முதல் சிறையின் கண்காணிப்பாளர் திருமதி.ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோவை சிறை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் சிறை கண்காணிப்பாளரான திருமதி.ஆண்டாள், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி சிறை கண்காணிப்பாளரான திருமதி.நிகிலா நாகேந்திரன், கடலூர் மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு:
கோவை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் பதவிஉயர்வு பெற்று, கோவை சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சிறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.முருகேசன் பதவிஉயர்வு வழங்கப்பட்டு, திருச்சி சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூரில் 4 மூட்டை குட்கா பறிமுதல்

128 கடலூர்: கடலூரில் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையில் நான்கு மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சில பெட்டி கடைகளில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!