இனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 58 Second
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் மணல் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் விரகனூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வெள்ளைப் பூனை வயது (22) என்பவரை மணல் கடத்திய குற்றத்திற்காக சிலைமான் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்களின் பரிந்துரையின் பேரில் 29.09.2020ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி விக்னேஷ் என்ற வெள்ளைப் பூனை என்பவரை மணல் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மணல் திருட்டில் ஈடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் எச்சரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரண்டு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

343 தமிழகத்தில் இன்று இரண்டு IPS. அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐபிஎஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami