பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கிய காவல் ஆணையர்

Admin
1 0
Read Time2 Minute, 3 Second

சென்னை : சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டம் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கினார். பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கியும் மற்றும் தொற்று கண்டறிதல் . தடுப்பூசி முகாம் துவக்கிவைத்தார். காவல்துறையினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உடன் இணைந்து பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு)டாக்டர். கண்ணன் இ.கா.ப. இணை ஆணையர் (தெற்கு)திருமதி லட்சுமி இ.கா.ப துணை ஆணையர்கள் திரு ஹரிஹரன் பிரசாத் இ.கா.ப. மருத்துவர் தீபா சக்தியன்.இ.கா.ப மற்றும் காவல் அதிகாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முக கவசம் அணிதல் . சமூக இடைவெளி கடைபிடிப்பதன் அவசியத்தையும் அடிக்கடி கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம்செய்வதின் அவசியத்தையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் பகிர்ந்தார்கள்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

1,023 மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேர்கைது மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் . […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami