இலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 59 Second
தேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், வாடகை வாகனத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் இலவச முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த
காவல்துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றும் எடுத்துக்கூறினார்.

தேனியிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்

திரு.P.குருசாமி


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்

993 தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்! மே 5-ம் தேதி தொடங்கவிருந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami