தாக்குதல்; 3 பேர் கைது

Prakash

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் திருமலை. இவர் சம்பவத்தன்று நேற்று டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

டாஸ்மாக் கடை மூடும் நேரமான மதியம் 12 மணிக்கு வந்த மூன்று பேரை அவர் தடுத்து நிறுத்தி திரும்ப செல்லுமாறு திருமலை கூறியுள்ளார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து திருமலையின் தலையின் மேல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய உத்திரமேரூர் பேரூராட்சி சேர்ந்த செந்தில்(37),குப்பைய நல்லூரைச் சேர்ந்த பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ்(50),அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (25) ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

352  தூத்துக்குடி:  அனந்த நம்பி குறிச்சி பகுதியை சேர்ந்த அபிராமி(20), என்பவர் அவரது கணவருடன் கடந்த 26.04.2021 அன்று தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழி சாலையில் பாறைகுளம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452