செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

Prakash

 தூத்துக்குடி:  அனந்த நம்பி குறிச்சி பகுதியை சேர்ந்த அபிராமி(20), என்பவர் அவரது கணவருடன் கடந்த 26.04.2021 அன்று தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழி சாலையில் பாறைகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அவரது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அபிராமி கழுத்தில் அணிந்திருந்த 54 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் தங்க செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அபிராமி திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வாசுதேவன் விசாரணை மேற்கொண்டதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது ஸ்ரீவைகுண்டம், வெல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (21), என்பது தெரியவந்தது. பின் உதவி ஆய்வாளர் அவர்கள் ரமேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். *மேலும் எதிரியிடமிருந்து 54 கிராம் மதிப்புள்ள தங்க செயினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். செயின் திருட்டில் ஈடுபட்ட எதிரியை உடனடியாக கைது செய்த தாலுகா காவல்நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெரம்பலூா் காவல் நிலையத்தில் கொரோனா விழிப்புணா்வு

337 பெரம்பலூா்:  பெரம்பலூா் காவல் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாா் தலைமை வகித்து  பேசுகையில்,வணிக வியாபாரிகள், உரிமையாளா்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநா்கள் கொரோனோ […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452