போத்தனூரில் கத்திகுத்து: அண்ணன் கைது

Prakash
கோவை:  கோவை போத்தனூர் சாரமேடு பக்கமுள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் காதர் (வயது 53 ) இவரது மகன்கள் ஜாகிர் உசேன் (வயது 27) தவ்பிக் (வயது 23) இவர்களில் தம்பி தவு பிக் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது தாயாரிடம் அடிக்கடி தகராறு செய்வாராம் .நேற்று இதை தவ்பிக்கின் தங்கை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த தவு பிக் அவரது தங்கையை அடித்து உதைத்தார். இதைப் பார்த்த அண்ணன் ஜாகிர் உசேன் தம்பி தவ்பிக்கை கண்டித்தார் .அவரிடமும் தவ்பீக் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர்உசேன் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தம்பி தவ்பீக் வயிற்றில் சரமாரி குத்தினார் .இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இதுகுறித்து தந்தை காதர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அண்ணன் ஜாகிர் உசேனை நேற்று இரவு கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிணத்துக்கடவு வி.ஏ.ஓ க்கு மிரட்டல், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

227 கோவை:  பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் ( வயது 35 ) இவர் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையில் வியாபாரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452