கிணத்துக்கடவு வி.ஏ.ஓ க்கு மிரட்டல், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Prakash

கோவை:  பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் ( வயது 35 ) இவர் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். இதை கிணத்துக்கடவு கிராம நிர்வாக அதிகாரி கேசவமூர்த்தி எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் ராஜேஷ் அவரது தம்பி சதீஸ் ( வயது 25 ) கடை ஊழியர் ராஜா (வயது 26) ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி கேசவமூர்த்தியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்கள். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வியாபாரி ராஜேஷ் ,ராஜா, சதீஷ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தல், கொரோனா விதிமுறைகளை மீறல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய பட்டுள்ளது.


நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் வாலிபர்கள் கைது

345 கோவை:  கூடலூரை சேர்ந்த மகாபிரபு (23) .இவர்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அத்திப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452