ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை

Prakash

சேலம்:  சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை காணப்பட்ட நிலையில் இன்று தேவை இல்லாமல் சுற்றித் திரியும் நபர்களுடைய எண்ணிக்கை குறைந்தது.

குறிப்பாக தேவை இல்லாமல் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

.இதில் சாலையில் சுற்றும் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரையும் நிறுத்தி, கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள், பொய்யான காரணங்களைக் கூறிக் கொண்டு சாலையில் சுற்ற வேண்டாம்,

அப்படி சுற்றுவதால் உண்மையான காரணங்களைக் கூறிக் கொண்டு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை

374 திண்டுக்கல்:  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு பொது போக்குவரத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452