வாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை

Prakash

திண்டுக்கல்:  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை ,காய்கறி, இறைச்சி ஆகியவற்றின் கடைகள் காலை 10 மணியோடு அடைக்கப்படுகின்றன.

இதையொட்டி ஊரடங்கு தீவிரமாக அமுல்படுத்துவதற்கு ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தின் எல்லைகள் உட்பட முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.

அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே ஊரடங்கை மீறுவோறு தடுப்பதற்க்கு போலீசார் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளனர். அதன்படி  திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்பட மாவட்டம் முழுவதும் மதியம் 12 மணிக்கு மேல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் செல்வோரை மடக்கி போலீசார் விசாரித்தனர்.

அதில் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு இனிமேல் விதியை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்தனர். அதேநேரம் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் நிற்பதைப் பார்த்து சில மீட்டர் தூரத்திலேயே வாகன ஓட்டிகள் திரும்பி சென்றனர்.


திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்

திரு.மீரா மைதீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி

340 தென்காசி:  தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452