கோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்

Prakash
கோயம்புத்தூர்:  கோயம்புத்தூர் சரகத்திற்குள்பட்ட பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் காவல்நிலையங்களில் 139 பணியாளர்கள் உள்ளனர்.இதில் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் பணியாற்றும் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் என பலரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதே வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்த பல குடும்பங்கள் தங்கள் தொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.இந்நிலையில் காவல்நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் வகையில் தினமும் மூலிகை கலந்த நீராவி பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஆவிபிடிப்பதற்கான குக்கர்கள் வழங்கப்பட்டன. உதவி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கோவை, விஜயலட்சுமி வெட்கிரைண்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜன் பிரபு சார்பில் காவல்நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் துடியலூர் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம்,அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அன்னம்,பெரியநாயக்கன்பாளையம்,தடாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் திலக்,ஜான் ஜெனின் சிங் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்

358 தேனி: நகர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், முத்துசாமி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சாய்சரண் தேஜஸ்வி, போடி நகர துணை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452